எத்தனை
முறை
ஏற்றி
விட்டாலும்
அத்தனை
முறையும்
நழுவி
விழும் ...
யானை
சவாரி
செய்யத்
தெரியாத
எங்கள்
வீட்டு
பூனைக்குட்டி...
தன்
தாயின்
முதுகிலிருந்து.
அப்படித்தான்
விழுகிறேன்.
நானும்…
என் கணங்களிலிருந்து
மாலை
வேளையில்
சாரல்
மழையில்
பேருந்து ...
பயணம்..
அந்திச்
சூரியனை
உள்வாங்கி
ஒளிர்ந்து
ஒன்றன்
பின்
ஒன்றாய்
ஜன்னல்
கம்பியில்
மிதந்து
ஒன்றினுள்
ஒன்று
நுழைந்து
சற்றே
கனமாய்
உதிர்ந்து
விழும்
ஒற்றை
நீர்த்திரள்..
அப்படித்தான்
உதிர்கிறேன்
நானும்
என்
கணங்களிலிருந்து
இன்னமும்
இருக்கிறேன்
ஈரத்தின்
மிச்சமாய்..
கூட்டல்
பெருக்கல்
வகுத்தல்
ஏதுமற்ற
வெற்றுப்
புள்ளி
கற்றை
தாள்களில்
யாதுமற்ற
மோன நிலையில்
மீதம்
பார்த்த
ஈவுத் தொகையின்
மொத்தப்
பிழையாய்
கழிகிறேன்
நான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக