சனி, 1 அக்டோபர், 2011

விற்பனைக்குச் சில முகமூடிகள்......

ஏறிய இடம்
திரும்ப வராது .
இறங்கும் இடமும்
தெரியாது..

இப்படி
செல்கிறது
என் வாழ்க்கை
பயணம்...

இதில்
என்னுடன்
பயணித்த
இவர்கள்

நிஜங்களில்லா
கரும் நிழல்கள்
முகமே   இல்லாத்
வெறும் முகமூடிகள்....

பாசமாய்
நேசமாய்
என்னுடன்
பயணித்து

இறங்குமிடம்
வந்ததும்
கண நேரத்தில்
என்
இதயத்தை
நசுக்கி

அதில்
வழிந்த
இரத்தத்தில்
விரல்களை
நனைத்து

தங்கள்
கைரேகை
முத்திரையுடன்
கழற்றித் தந்த
முகமூடிகள்....

மீண்டும்
அடுத்த
நிறுத்தம்
மற்றொரு 
பயணி...
  
இதனால்
என் பயணம்
தாமதப்பட்டதே - அன்றி
தடைபடவில்லை ...

இந்த
நினைவுகள்
பின்னோக்கிச்
செல்லும்
புகையைப்போல...
என் 
பயணமோ
முன்னோக்கிச்
செல்லும்
இரயிலைப் போல....

மீண்டும்
அடுத்த நிறுத்தம்
மற்றொரு பயணி
மேலுமொரு முகமூடி...

இந்த
அனுபவங்களின்
உராய்வில்
புரிந்தது
வாழ்வின்  இரகசியம்...

இன்று
என்னிடமும்
பல
முகமூடிகள்...


உறவுகளுக்காய்  ஒன்று
நட்பில் தோய்த்த ஒன்று
கனிவும் கருணையுமாய் ஒன்று
வஞ்சக சூழ்ச்சியுடன் ஒன்று

அடிமையாய்,
அடக்குபவனாய்,
பாமரனாய்,
பகுத்தறிவாளனாய்.

இப்படி
என்னிடமும்
பல முகமூடிகள்..

எது வேண்டும் உங்களுக்கு?...


என்
இப்போதைய
முகமூடி

ஒரு கவிதை சொல்ல முயற்சிப்பவனாக....  

வாங்கிக் கொள்கிறீர்களா?



என்றென்றும் அன்புடன்,
இரா. கு. இராம் சுந்தர்.


 

1 கருத்து:

  1. தெரியாத்தனமாக நட்பிற்கு இலக்கணமாய் இருக்கலாமென்று (இளிச்ச வாயனோ!?) அமைதி எனும் முகமூடி அணிந்து...பிறகு நமக்கும் கருத்து சுதந்திரம் உண்டுதானே! என்றெண்ணி கருத்துச்சுதந்திர முகமூடியை மாட்டிக்கொண்ட போது... நண்பர்கள் தங்களுடைய முகமூடியை கழற்றியேவிட்டார்கள்... ஆஹா என்ன அழகு... காண கண்கோடி வேண்டும் நண்பா... ஆம்...நாம் அமைதி காக்கும்வரை இருந்த அழகு முகமூடி நாம் கருத்துச்சொன்னால்...ரௌத்திரம் பழகு!...

    என்னிடமும் என் நண்பர்கள் விட்டுச்சென்ற முகமூடிகள் ஏராளம்... பிசாசுபோல் ஒட்டிக்கொண்ட முகமூடியை கழற்றவே வழியில்லை...

    பதிலளிநீக்கு