அன்றைய
மாலைப்பொழுதில்
க்ண்களின்
சந்திப்புகளில்
சோகம் த்தும்பியது..
முகமறியா நட்புகளின்
கரங்கள் இணைந்தபோது
அங்கு
மெழுகுதிரிகளின்
பரிமாற்றம்
நடந்தது...
அப்படித்தான்
நானும்
ஒரு
காதல் இணைக்கு
மெழுகுதிரி கொடுக்க
அணுகினேன்..
அமிலம்
அலையாய்
வந்த்துபோல்
அவசரமாய்
அவர்கள்
நகர்ந்தார்கள்...
இன்னொரு
சுனாமி வந்து
உங்களை மட்டும்
கொண்டு போக
என்று
சபித்தபடியே - நான்
திரும்பும்போது
ஹ,,ஹ ஹா...
என்று ஒரு
எக்காளச்
சிரிப்பு..
சிரிப்பின்
திசை நோக்கினேன்
உருவம் இல்லை
சத்தம் மட்டும்
தொடர்ந்த்து...
யார் நீ?
என்றேன்..
நான்தான்
காற்று
என்றது..
ஓ..
உடையை விலக்கி
உடலை வருட
உலகம் அங்கீகரித்த
அயோக்கியனல்லவா நீ..
என்னைப்
பார்த்து சிரிப்பது
ஏன்?
என்றேன்.
பின்
என்ன செய்யச்
சொல்கிறாய்..
ஆண்டுக்கொருமுறை
அழுது புலம்ப
அவ்ர்கள் இட்த்தை
நீ
எடுத்துக் கொண்டு
அவ்ர்களையே
சபிக்கிறாய்..
என்றவாறு
மீண்டும் சிரித்த்து..
சிரி....
இன்னும்
சத்தம் போட்டு
சிரி....
யாராவது உன்னை
பலூனில் அடைத்து
யாரிடமாவது
விற்று விடட்டும்
என்றேன்..
எரிச்சலுடன்..
சரி ..சரி..
கோபப்படாதே....
என்றது..
அப்போது
மேனியில்
விழுந்த
சிறு தூறல்
என் வெப்பம்
தணித்தது..
பார்
வருணனின்
அஞ்சலி..
உனக்குதான்
மனமில்லை
ஈரமே இல்லாத காற்று
நீ
என்றேன்..
எரிந்து
கொண்டிருந்த
என்
மெழுகுதிரியை
ஊதி
அணைத்தது
காற்று..
இரவு
வந்து
விட்டாலே
விளக்கை
அணைப்பதைத் தவிர
வேறு வேலை
உனக்கில்லையா?
என்றேன்..
அடிமுட்டாளடா நீ
இயற்கை
சொல்லும் சேதி
என்னவென்றே
புரியாத
அடிமுட்டாளடா நீ
ஆக்ஸிஜனை
உட்கொண்டு
கார்பன் டை ஆக்ஸைடை
வெளியேற்றிடும்
அதிசய மரமடா நீ..
என்றது..
அதிர்ந்து
போனேன்..
என்
இயலாமை
அழுகையாய்
வெடித்தது..
விழி நீர்
வடிகால் வாரியமே
நிறுத்து
உன் விசும்பலை..
என்றது..
பிணங்கள்
வழிந்த
குழிகளில்
முதல்
சவமாய்
நீ
கொன்று புதைத்த
ஒற்றுமை.
இனியாவது
ஒற்றை
மெழுகுதிரியை
விட்டு விட்டு
கற்றை
மெழுகுதிரிகளை
கையில் .
ஏந்து..
தீப்பந்தமாய்
ஒளியேற்று
காற்றைச் சுடு
நீரை ஆவியாக்கு.
சமுத்திரம்
பிளந்து
பாதை
தெரிந்த
அற்புதம்
இன்னொருமுறை
நிகழட்டும்..
என்று
ஆவேசமாய்
முடித்தது..
நான்
அமைதியாக
உனக்கு
அரசியல்
தெரியுமா?
என்றேன்..
திகைத்துப் பார்த்தது
இலங்கையில்
வழிந்த
இரத்தத்தை
முகர்ந்து பார்..
அதில்
இருக்கும்
எங்கள்
இந்திய அரசியலின்
வீச்சம்...
எங்களுள்
பிரபாகரன்கள்
இல்லை..
ஆனால்
கருணா க்கள்
அதிகம்
என்றேன்.
மூச்சற்று
நின்றது காற்று..
மீண்டும்
ஒற்றை
மெழுகுதிரியை
கையில்
எடுத்தேன்
அழுது
புலம்ப
ஆயத்தம்
ஆனேன்.
இன்னொரு
சுனாமி
வந்து
உங்கள்
அனைவரையும்
கொண்டு போக..
என்று
சபித்தபடி
நகர்ந்தது
காற்று...
என்றென்றும்
அன்புடன்,
இரா. கு. இராம்
சுந்தர்.